சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாகவே மசாஜ் பார்லர் என்கின்ற பெயரில் பாலியல் சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு சில ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதனை அடுத்து தீவு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் Jurong மற்றும் Boon Lay பகுதியில் கடந்த வியாழக்கிழமை போலீசார் சோதனை நடத்தி, ஐந்து பெண்களை கைது செய்திருக்கின்றனர். மற்றும் மூன்று மசாஜ் நிலைய உரிமையாளர்களிடம் தற்பொழுது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Singapore – Women caught in police raids over alleged sexual services at massage parlours.

இந்த அதிரடி சோதனையில் இரண்டு நிறுவனங்கள் திறந்தவெளி மசாஜ் நிலையங்களாக இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த நடவடிக்கையின் போது 36 முதல் 51 வயதுக்கு உட்பட்ட ஐந்து பெண்கள் மசாஜ் பார்லர் என்ற போர்வையில் அதன் உள்ளே செயல்பட்டு வந்த விடுதியில் பாலியல் சேவைகளை வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் மூன்று கடை உரிமையாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 4ம் தேதி வியாழன் அன்று ஜூரோங் போலீஸ் பிரிவை சேர்ந்த சில உயர் அதிகாரிகள், சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் விபச்சாரத்திற்கு எதிரான சோதனைகளை சில ரகசிய தகவல்களின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர். அதிலும் அந்த மூன்று இடங்களில் ஒன்று ஒரு வணிக வளாகத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இரண்டும் ஜூரோங் மற்றும் பூன் லே பகுதியில் உள்ள கடை வீடுகள் எனப்படும் ஷாப் ஹவுசஸ் ஆக அமைந்திருக்கிறது.

சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்க சிங்கை போலீசார் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையின் போது, ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இது குறித்து நேற்று வெள்ளிக்கிழமை நமது சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட ஒரு செய்தி குறிப்பில்… “இந்த 2026 ஆம் ஆண்டில் இரண்டாம் பாதியில் இருந்து நமது சிங்கை அரசு திறந்தவெளி மசாஜ் நிலையங்களுக்கான உரிம கட்டுப்பாடுகளை மாற்றி அமைக்கின்றது ஆனால் இந்த சோதனையானது அந்த புதிய கட்டுப்பாடுகள் அமலாவதற்கு முன்னதாக நடத்தப்பட்டது. ஆகவே இத்தகைய மசாஜ் நிலையங்களுக்கு 2018 முதல் உரிமம் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அரசிடம் அவர்கள் பதிவு செய்ய வேண்டாம் என்றாலும் போலீசாரிடம் அவர்கள் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அதேபோல மசாஜ் செய்து கொள்ள வரும் வாடிக்கையாளர்களுக்கு தனிமையில் மசாஜ் செய்யும் வகையில் அந்த கட்டிடத்திற்குள் தனி அறைகளோ, தடுப்புகள் இடப்பட்ட அறைகளோ அல்லது மறைவாக காணப்படும் சிறிய அறைகளோ எதுவுமே இருக்க கூடாது என்ற கட்டுப்பாடுகள் கட்டாயம் இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.

ஆனால் கடந்த வியாழன் என்று நடந்த அதிரடி சோதனையில் Boon Lay மற்றும் ஜூரோங் பகுதியில் நடந்த சோதனையில் தடுப்பு சுவர்கள் மற்றும் சிறிய அறைகள் கொண்ட மசாஜ் நிலையங்களில் தான் சோதனை நடந்தது என்றும் அங்கு சட்டத்திற்கு புறம்பாக மசாஜ் நிலையம் என்ற பெயரில் பாலியல் சேவை வழங்கப்பட்டு வந்ததும் கண்டறியப்பட்டதாகவும் இந்த இரண்டு சோதனைகளின் பொழுதும் ஊடகவியலாளர்கள் நேரில் வந்து நிலைமையை பார்வையிட்டதாகவும் போலீசார் திறப்பில் கூறப்பட்டிருக்கிறது.