சிங்கப்பூரில் கிட்டத்தட்ட மூன்று நிறுவனங்கள் முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்டதால், அதனால் 400-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த மூன்று நிறுவனங்களுக்கும் பொதுவான இயக்குனராக செயல்பட்டு வந்த இந்தியரும், சிங்கப்பூர் PR [பெற்றவருமான பழனி. சிங்கப்பூரை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியானது. மேலும் அவரை தொடர்புகொள்ளும் பணிகளையும் மனிதவள அமைச்சகம் மேற்கொண்டது.
இந்த சூழ்நிலையில் தற்பொழுது பழனி மீண்டும் சிங்கப்பூருக்கு திரும்பி உள்ள நிலையில், அவருடைய பாஸ்போர்ட் கைப்பற்றப்பட்டு சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் அவரிடம் தீவிர விசாரணை நடத்த தொடங்கி இருக்கிறது. நேற்று ஜூன் 28ஆம் தேதி இது குறித்த ஒரு புதிய தகவலை வெளியிட்ட சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் நாடாளுமன்ற செயலாளர் தினேஷ் வாசுதாஸ் “கடந்த ஜூன் 26 ஆம் தேதி அவர் சிங்கப்பூருக்கு திரும்பியதாகவும், அவர் மனிதவள அமைச்சகத்தின் அனைத்து விசாரணைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அந்த நபருடைய பாஸ்போர்ட் அரசால் கைப்பற்றப்பட்டு தற்பொழுது விசாரணை நடந்து வருவதாகவும்” அவர் கூறினார்.
ராமு பழனிவேல் என்பவர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காத விவகாரத்தில் தொடர்புடைய VVR Plant Engineering, SK Industries, KPA Engineering ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும், மேலும் சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் நான்கு நிறுவனங்களுக்கும் இயக்குனராக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அவர் சம்பந்தப்பட்ட அந்த ஏழு நிறுவனங்களுமே ஏர் கண்டிஷனர் பழுது பார்ப்பது, பிளம்பிங் மற்றும் கட்டுமான சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்கள் என்று தெரிய வந்திருக்கிறது.
மேலும் தற்பொழுது அவரிடம் விசாரணை மேற்கொண்டு வரும் மனிதவள அமைச்சகம் சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்தை இயக்கி வரும் முதலாளிகள் உச்சகட்ட பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், நமது சிங்கப்பூரின் வேலை வாய்ப்பு சட்டம் மற்றும் வெளிநாட்டு மனிதவள சட்டங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் தனது அறிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் கூறினார்.
ஊழியர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நடக்கப்படும் எந்த ஒரு விதிமீறல்களுக்கும் 3000 வெள்ளி முதல் 15,000 வெள்ளி வரை அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருக்கின்றார். இதற்கு இடையில் அவரிடம் விசாரணை நடந்துவரும் அதேநேரம், நமது சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அதே துறையில் மாற்று வேலை வாய்ப்பை பெற்று தர உறுதி கொண்டிருக்கிறது.
அதே நேரம் அந்த மூன்று நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட 400 ஊழியர்கள் சிங்கப்பூர் தொழிலாளர் விவாத மேலாண்மைக்கான முத்தரப்பு கூட்டணி (TADM) அதிகாரிகளுடன் இணைந்து அவர்களுடைய சம்பளபாக்கி கோரிக்கைகளை நேரடியாக பதிவு செய்யவும் உதவ உள்ளதாக கூறி இருக்கிறார். பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களை சந்திக்க சென்றிருந்த அமைச்சர் தினேஷ் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த பொழுது “பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் 20-க்கும் மேற்பட்டோருக்கு ஏற்கனவே வேலை கிடைத்துவிட்டது என்றும் மீதமுள்ளவர்களுக்கும் அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் வேலை வழங்கப்படும் என்றும் எதிர்பார்ப்பதாக கூறினார்.
இந்த விஷயத்தில் MOM-க்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்த வெளிநாட்டு ஊழியர் மையம் (MWC) மற்றும் NTUC அமைப்புகளுக்கு தன்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
