சிங்கப்பூரில் ஆண் பெண் பேதம் இன்றி சட்டம் என்பது இங்கு அனைவருக்கும் ஒன்றுதான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது ஒரு வழக்கு. சிங்கப்பூரில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் தாய்மார்கள் பாலூட்டும் அறையில் வைத்து ஒரு பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறப்பட்ட வழக்கில் கடந்த 2025 ஆம் ஆண்டு சர்மா என்ற நபருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் ஆறு பிரம்படிகளும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அங்கித் சர்மா மேல்முறையீடு செய்திருந்தார்.
Singapore – Man acquitted in a case alleging inappropriate behaviour towards a woman; shocking twist revealed.
இந்த சூழலில் உண்மையில் யார் மீது தவறு இருக்கிறது என்பதை நீதிமன்றம் தீர விசாரித்து தற்பொழுது இந்த வழக்கில் புதியதொரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது, அந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி இரவு சாங்கி சிட்டி பாயிண்ட் மாலில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையில் தன்னை அலுவலக ரீதியாக சந்திக்க வந்த பெண்ணை ஷர்மா பாலியல் ரீதியாக சீண்டியதாக புகார்கள் எழுந்தது. சம்பவத்தன்று மாலை சுமார் 6.30 மணி அளவில் அந்த மாலில் இருவரும் மது அருந்தி உள்ளனர். அதன் பிறகு அங்கிருந்த ஒரு தாய்மார்கள் பாலூட்டும் அறையில் தன்னை நிர்பந்தித்து உதடுகளில் முத்தம் கொடுத்ததாகவும் தனது கைகளை பிடித்து அவருடைய ஆணுறுப்பை பிடிக்க சொன்னதாகவும் கூறி அவர் மீது அந்த பெண் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த வழக்கு அதன் பிறகு விசாரணைக்கு வந்து சர்மாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 6 பிரம்படிகளும் விதிக்கப்பட்டு கீழ் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் தான், நான் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்று கூறி சர்மா மேல்முறையீடு செய்திருந்தார். இந்த சூழலில் அந்த பெண்ணிடமும் சில குறுக்கு விசாரணைகள் நடத்தப்பட்டது. ஷர்மா உங்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார் என்று கூறும் பட்சத்தில் அவர் அங்கிருந்து வெளியேறாமல் அதே மாலில் இருந்தது ஏன் என்று வழக்கறிஞர்கள் கேள்விகளை முன் வைத்தனர்.
அதற்கு அந்த பெண் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த நிலையில் அடுத்தடுத்த விசாரணைகளில் தான் அப்பெண் போலியான ஒரு விஷயத்தை கூறியது வெளிச்சத்திற்கு வந்தது. அந்த பெண்ணும் சர்மாவும் அமர்ந்து மது அருந்தியது உண்மைதான் என்றாலும், அந்த பெண்ணை முத்தமிட அருகில் சர்மா அருகில் பொழுது அப்பெண்ணின் வாய் துர்நாற்றமாக இருந்ததால் அந்த பெண்ணை முத்தமிடாமல் சர்மா அங்கிருந்து நகர்ந்து உள்ளார். மேலும் உன்னுடைய வாய் துர்நாற்றமாக இருக்கிறது என்று கூற, அதில் கடுப்பான அப்பெண் போலியான குற்றச்சாட்டை அவர் மீது முன் வைத்திருக்கிறார். இந்த சூழலில் அதன் பிறகு வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு தற்பொழுது சர்மா அந்த வழக்கிலிருந்து நிரபராதி என்று கூறி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
