சிங்கப்பூரில் தன்னுடைய மனைவியிடம் இருந்து தன்னை பாதுகாக்க கோரி கணவன் ஒருவர் நீதிமன்றத்தில் கொடுத்த மனுவை நீதிபதிகள் நிராகரித்துள்ள சம்பவம் அரங்கேறியிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி இந்த வழக்கு குறித்த விசாரணை நீதிபதி Soh Kian Peng முன்னிலையில் நடைபெற்றது. அப்பொழுது அந்த மனைவி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் தான் சீனாவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாலும், தற்சமயம் சிங்கை பயணிக்க முடியாது என்பதாலும் தன்னால் அந்த விசாரணையில் பங்கேற்க முடியவில்லை என்று அந்த பெண் கூறி இருந்தார்.

Singapore – Wife allegedly stabbed her husband’s private part with a needle for not giving a satisfactory massage.

இருப்பினும் அதற்கான முறையான மருத்துவ சான்றுகளை அவர் சமர்ப்பிக்கவில்லை. அதனால் அவருடைய கோரிக்கையை ஏற்கமுடியாது என்று கூறிய நீதிபதி அவருடைய வாதத்தை ஏற்க மறுத்தார். இந்த சூழ்நிலையில் தான், விசாரணையை நீதிபதியை தொடருமாறும் அதன் முடிவு எதாக இருந்தாலும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் அந்த மனைவி கூறி இருந்தார்.

கணவர் அளித்த குற்றச்சாட்டுகள்.

கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி நடந்த ஒரு சம்பவத்தை மையமாகக் கொண்டு அந்த கணவர் நீதிமன்றத்தில் மனைவியிடம் இருந்து பாதுகாப்பு கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது. அதில் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தன்னுடைய Assurance Package பணத்தை கேட்டு மனைவி மிரட்டியதாகவும், தனக்கு கள்ளக்காதலி இருப்பதாக கூறி குற்றம்சாட்டி, அதைத்தான் மறுத்த பொழுது சமையலறையில் இருந்த 15 சென்டிமீட்டர் நீளமுள்ள கத்தியை எடுத்து என்னை நோக்கி நீட்டினார் என்றும் கூறியிருக்கிறார். அந்த மனைவியின் சகோதரரும் இந்த சம்பவத்தில் தலையிட்டு இருக்கிறார். அதன் பிறகு ஒரு நாள் தன்னுடைய அந்தரங்க உறுப்பு கருப்பாக மாறுவதை தடுப்பதாக கூறி, அந்த மனைவி 3 அக்குபஞ்சர் ஊசிகளை எடுத்து தன்னுடைய விதை பைகளில் குத்தியதாகவும் அந்த கணவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஒரு சில நாட்கள் கழித்து தனக்கு மசாஜ் செய்யுமாறு அந்த மனைவி கட்டளையிட்டு இருக்கிறார். ஆனால் அவர் அந்த மசாஜை தவறாக செய்ததால், மசாஜ் செய்ய பயன்படுத்திய தடியாலேயே தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். பின்னர் அதிகாலை 3 முதல் 4 மணிக்கு அவர் தூங்கிவிட்டார் என்றும், அதன் பிறகு மறுநாள் எழுந்து போலீஸிடம் தான் புகார் அளித்ததாகவும் அந்த நபர் கூறி இருக்கிறார். மேலும் என் மனைவிக்கு நான் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறேன் என்று சந்தேகம் வரும்பொழுது எல்லாம் எங்கள் வீட்டை சுற்றி 100 முறை முழங்காலிட்டு ஊர்ந்து செல்ல என்னை கட்டாயப்படுத்தினார்.

வேலையில் இருந்து தாமதமாக நான் வீடு திரும்பினால் எனக்கு அடி கட்டாயம் உண்டு. என்னுடைய முழு மாத சம்பளத்தையும் மனைவியிடம் நான் ஒப்படைக்க வேண்டி இருந்தது, உணவு செலவிற்காக ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து வெள்ளி மட்டுமே எனக்கு அவர் வழங்குவார். மனைவியின் துணிகளை துவைக்கவும், தினமும் இரவில் அவருக்கு மசாஜ் செய்யவும் நான் கட்டளையிடப்பட்டேன். பாரம்பரிய சீன மருத்துவம் பற்றிய அறிவு தனக்கு இருப்பதாக கூறி ஒரு குறிப்பிட்ட வர்ம புள்ளியில் அக்குபஞ்சர் ஊசியை குத்தி என்னை கொன்று விடுவதாகவும் அவர் மிரட்டியதாக அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனால் பெண்கள் சாசனம் 1961 பிரிவு 60(A) 1-ன் படி பாதுகாப்பு வழங்க அவர்1 கோரியிருந்தார். ஆனால் இப்பொழுது அந்த கணவர் அந்த மனைவியுடன் வசிக்கவில்லை என்பதால், இனி அவருக்கு அந்த பெண்ணால் எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது. மேற்கொண்டு மிரட்டல்கள் வந்தால் அதை போலீசார் மூலம் அணுகி கொள்ளலாம் என்று கூறி நீதிபதிகள் அவருடைய மனுவை நிராகரித்து பாதுகாப்பு வழங்க மறுத்து இருக்கின்றனர்.