கடந்த 2025ம் ஆண்டு நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்து உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விமானத்தில் பயணித்த ஒரே ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நிலையில், அதிலிருந்து 12 பணியாளர்கள் உட்பட விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர். அது மட்டுமல்லாமல் அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது ஒரு கல்லூரியின் விடுதி பகுதி என்பதால், அங்கு இருந்த 19 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 67 பேர் பலத்த காயமடைந்தனர். இந்நிலையில் இந்த விபத்துக்கு பிறகு ஏர் இந்தியாவின் பங்குகளும் சரி, அதனுடைய பராமரிப்பும் சரி பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இப்போது கிட்டத்தட்ட 22,000 கோடி அளவிலான பணத்தை எதிர்பார்த்து தன்னுடைய சீரமைப்பு பணிகளை ஏர் இந்தியா மேற்கொண்டு வருகிறது.
டாட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் ஏர் நிறுவனத்தின் 25.1 சதவீத பங்குகளை நமது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த நிதி ஆண்டில் மட்டும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிகமாக நஷ்டம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பொறியாளர்கள் ரீதியாகவும், பணியாளர்கள் ரீதியாகவும் அந்நிறுவனத்திற்கு உதவ தற்பொழுது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முன் வந்திருக்கிறது. முக்கியமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தின் மீதான நீண்டகால முதலீட்டில் உள்ள சவால்கள் குறித்தும் பகுப்பாய்வு செய்து வருவதாக அதனுடைய தலைமை நிர்வாக அதிகாரி goh choon phong தெரிவித்துள்ளார்.
SIA முதலீட்டாளர்கள் கவலை
ஏற்கனவே கிட்டத்தட்ட 22 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தற்பொழுது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் உதவ முன் வந்திருப்பது அதனுடைய முதலீட்டாளர்கள் மத்தியில் சிறு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியாவிற்கு நிதி உதவிகள் வழங்கினால் அது அதனுடைய பங்குதாரர்களையும் வெகுவாக பாதிக்கும். காரணம் ஏற்கனவே நஷ்டத்தில் ஓடும் ஒரு நிறுவனத்தில் மீண்டும் மீண்டும் பணத்தை முதலீடு செய்வது யாருக்கும் பெரிய அளவில் பிடிக்காத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் ஏர் இந்தியாவிற்கு செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் ஒவ்வொரு டாலரும் அதனுடைய முதலீட்டாளர்களின் Divident எனப்படும் ஈவுத்தொகையை பெரிய அளவில் குறைக்கும். இருப்பினும் ஏர் இந்தியா ஒரு மிகச்சிறந்த நிறுவனமாக செயல்பட்டு வருவதையும் அதனை மீண்டும் முன்பு போல இயக்குவதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எடுத்திருக்கிறது.
மேலும் இதனால் ஏற்படும் சிறு பின்னடைவை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்று, ஏர் இந்தியாவின் நிலையில் சீர்செய்ய இது அவசியம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏற்கனவே இது போன்ற சில இக்கட்டான சூழல்களை கடந்து தான் மேலேறிய வந்திருக்கிறது. உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இப்போது ஏர் இந்தியாவிற்கு பொறியாளர் மற்றும் பணியாளர்கள் ரீதியாக உதவ உள்ளது. இருப்பினும் அதனுடைய Decision Making பணிகள் அனைத்து வழக்கம் போல TATA நிறுவனத்தால் மட்டும் நிர்வகிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.