சிங்கப்பூர் அரசு தற்பொழுது வெளியிட்டு இருக்கும் ஒரு புதிய அறிவிப்பு சிங்கப்பூரில் வீடு வாங்க ஆர்வமாக இருக்கும் பலர் மத்தியில் மிகப்பெரிய நற்செய்தியாக மாறி இருக்கிறது. வருகின்ற 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சிங்கப்பூர் அரசின் GLS எனப்படும் நில விற்பனை திட்டத்தின் கீழ் சுமார் 4745 புதிய தனியார் வீடுகளுக்கான நிலங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே இந்த ஆண்டின் முதல் பாதியில் சிங்கப்பூர் அரசால் அறிவிக்கப்பட்ட இந்த GLS திட்டத்தின் கீழ் வரும் நிலங்களுடன் ஒப்பிடும்பொழுது 2026 ஆம் ஆண்டின் மொத்த வீடுகளின் எண்ணிக்கை சுமார் 9320 என்ற அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும் பொழுது கிட்டத்தட்ட 50% வளர்ச்சியை இந்த திட்டம் எட்டி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் மக்கள் மத்தியில் வீடு வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் இந்த திட்டம் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இந்த புதிய நில ஒதுக்கீட்டு திட்டத்தின் மூலம் எக்ஸிக்யூடிவ் காண்டாமினியம் எனப்படும் EC உட்பட வரவிருக்கும் தனியார் வீடுகளில் மொத்தமான எண்ணிக்கை சுமார் 61 ஆயிரம் ஆக உயரம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இதில் மொத்தம் 32,000 மேற்பட்ட வீடுகள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் விற்பனைக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் நமது சிங்கப்பூரின் தேசிய வளர்ச்சி துறை அமைச்சர் Chee Hong Tat நேற்று புதன்கிழமை தன்னுடைய முகநூல் பக்க பதிவில் தெரிவித்தார்.
மேலும் அவர் வெளியிட்ட தகவலில் ஏற்கனவே இதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்ட ஒரு பட்டியலில் எட்டு தனியார் குடியிருப்பு தளங்கள் மற்றும் ஒரு வைட் சைட் பல்நோக்கு பயன்பாட்டு தளம் ஆகியவை அடங்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஜூரோங் லேக் டிஸ்ட்ரிக்ட்
அதுமட்டுமல்லாமல் சிங்கப்பூரின் சிங்கியின் ஜூரோங் லேக் டிஸ்ட்ரிக்ட் பகுதியில் உள்ள டவுன்ஹால் லிங்க் ஒயிட் சைட்டை வருகின்ற ஜூலை மாதத்தில் ஏலத்தில் விட சிங்கப்பூர் அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் அமைச்சர் தன்னுடைய பதிவில் கூறியிருக்கிறார். இது ஒரு பகுதி நேர மையம் என்பதனால் அதற்கு வெளியே சிங்கப்பூரின் பெரிய அளவிலான குடியிருப்பு மையமாகவும் வணிக வளாகங்களாகவும் மாற்றப்பட உள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் சுமார் 1200 வீடுகள், உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட இடங்கள் மற்றும் அலுவலகங்கள் உருவாக்கப்படும். அது மட்டும் அல்லாமல் எதிர்வரும் 2032 ஆம் ஆண்டுகளுக்குள் இந்த அனைத்து பகுதிகளிலும் எம்.ஆர்.டி வசதிகளுடன் இணைக்கப்படும் என்பதால் போக்குவரத்திற்கும் எதிர்காலத்தில் இந்த இடம் மிகச்சிறந்ததாக இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.
